துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
மேஷ ராசி
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1,2,3 பாதங்கள் முடிய)
மேஷ ராசியனருக்கு இந்த வருடம் சற்று சுமாரான ஆண்டாகவே இருக்கும். என்றாலும் வருட ஆரம்பத்தில் குரு பகவான் சாதமாக இருப்பதால் முந்தைய வருடத்தின் பலன்கள் தொடரும். சனி மற்றும் செவ்வாய் சஞ்சாரம் மற்றும் ஆகஸ்ட் 9 பிறகு குருவின் சஞ்சாரம், சாதகமாக இல்லை. இதனால் குடும்பத்தில் சிற்சில குழப்பங்கள், உடல் நலக்குறைவு, நிதி நிலை குறைவு போன்றவைக்கு சாத்திய கூறு அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை ராசி நாதனான செவ்வாயின் சாரமும் சாதகமாக இல்லாத காரணத்தால் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. திருமணமாகாத பெண்மணிகளுக்கு திருமண யோகம் குரு பகவான் மூலம் சற்று முயற்சியின் பேரில் அமையும். குடும்ப பெண்கள் சற்று அமைதி காப்பதன் மூலம் குழப்பமான சூழ் நிலையை சமாளிக்க முடியும்.
அஸ்வினி நட்சத்திரம்:
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முடிய உடல் நலனில் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முடிய உடல் நலனில் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நிதி நிலை மிக சாதாரணம். கொடுக்கல் வாங்கல் கவனம் மிக அவசியம். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் அரவே தவிர்க்கபட வேண்டும் குடும்ப விஷயங்களில் அதிக கவனம் அவசியம்..
வருட முழுவதும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் அதிக கவனம் தேவை. ஊர் வம்புக்கு போக வேண்டாம்.
பரணி நட்சத்திரம்:
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முடிய சீராக இருந்து வரும். பணி இடத்தில் பெயர் புகழ் ஓங்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முடிய சீராக இருந்து வரும். பணி இடத்தில் பெயர் புகழ் ஓங்கும்.
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நிதி நிலை மிக சாதாரணம். கொடுக்கல் வாங்கல் கவனம் மிக அவசியம். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் அரவே தவிர்க்கபட வேண்டும் அலுவலகத்தில் வேலை பளு கூடும். ஐந்தாம் இடத்தில் உள்ள ராகுவால் அவ்வப்போது பயம் வந்து விலகும்...
கார்த்திகை நட்சத்திரம்:
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முடிய சீராக இருந்து வரும். பணி இடத்தில் பெயர் புகழ் ஓங்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முடிய சீராக இருந்து வரும். பணி இடத்தில் பெயர் புகழ் ஓங்கும்.
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நிதி உடல் நலனில் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். வேலை காரணமாக அதிக அலைச்சல் ஏற்படலாம்.
அறிவுரை: மேஷ ராசிகாரர்கள் மிக தைரியமானவர்கள் என்பது உண்மை என்றாலும் உடல், குடும்ப விஷயங்களில் மிக கவனமாக நடப்பதால் கிரக பாதிப்பை குறைக்கலாம்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
ரிஷப ராசி
(கார்த்திகை 4ம் பாதம், ரோகிணி, மிருகசீர்ஷம் 1,2 பாதம்)
(கார்த்திகை 4ம் பாதம், ரோகிணி, மிருகசீர்ஷம் 1,2 பாதம்)
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருட முற்பகுதியில் சற்று சங்கடங்கள் இருந்தாலும் வருட பின் பகுதியில் குரு கன்னி ராசி பெயர்ச்சிக்கு பிறகு சங்கடங்கள் குறைந்து சாதகமான சூழ் நிலை உருவாகும். ஆகஸ்ட் மாதம் 10 வரை அலுவலகம் மற்றும் வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, சற்று கவனமாக முடிவெடுக்க வேண்டி வரும். இந்த கால கட்டத்தில் அலுவலக பணியில் ச்ற்று கவனமாக செயல்படவேண்டியது அவசியம். வாகன ஓட்டிகள் சற்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருட முற்பகுதியில் சற்று சங்கடங்கள் இருந்தாலும் வருட பின் பகுதியில் குரு கன்னி ராசி பெயர்ச்சிக்கு பிறகு சங்கடங்கள் குறைந்து சாதகமான சூழ் நிலை உருவாகும். ஆகஸ்ட் மாதம் 10 வரை அலுவலகம் மற்றும் வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, சற்று கவனமாக முடிவெடுக்க வேண்டி வரும். இந்த கால கட்டத்தில் அலுவலக பணியில் ச்ற்று கவனமாக செயல்படவேண்டியது அவசியம். வாகன ஓட்டிகள் சற்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு சங்கடங்கள் குறைந்து சாதகமான சூழ் நிலை உருவாகும். குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல கால கட்டம். தொழில் `மற்றும் பணியாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சாதமான தசா புக்தி நடப்பவர்களுக்கு பதவி உயர்வு ம்ற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவர் மனைவியிடையே கருத்து வேற்றுமைகள் குறையும். சனி ராகு கேது சாரம் சற்று அனுகூலமற்று இருப்பதால் தொழில் கூட்டாளிகளிடம் மிக கவனம் தேவை. வெளி நாடு செல்ல முயற்சிப்பர்களுக்கு வருட இறுதியில் நல்ல திருப்பம் ஏற்படும். விடு விற்க நினைப்போருக்கு நல்ல சாதமான சூழ் நிலை அமையும். மாணவ மாணவியருக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கார்த்திகை நட்சத்திரம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிற்ந்தவர்களுக்கு இந்த வருட முன் பகுதியில் சற்று அதிக கவனத்துடன் இருப்பதால் விபத்து மற்றும் ஸ்திரமற்ற தன்மையை குறைக்கலாம். சனியின் வக்ர நிவர்த்திக்கு (ஆடி மாதம்) பிறகு பணி மற்றும் தொழிலில் அனுகூலம் அதிகரிக்கும். ராகு கேது சாரம் சரியில்லாததால் அலைச்சல் அதிகரிக்க கூடும். தொழிலில் கூட்டாளிகளை தீர ஆராய்ந்து சேர்த்துக் கொள்ளவும்.
ரோகிணி நட்சத்திரம்
ரோகிணி நட்ச்சத்திர காரர்களுக்கு இந்த வருட முன் பகுதியில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பதன் மூலம் சுமூகமான சூழ் நிலை உருவாகும். குரு பெயர்ச்சிக்கு பிறகு குடும்ப குழப்பங்கள் குறையும். சகோதர சகோதரிகளிடையே கருத்து வேற்றுமை வந்து விலகும். புது வீடு வாங்க மற்றும் மாற நல்ல தருணம் இது.
மிருகசீர்ஷம் நட்சத்திரம்
மிருகசீர்ஷ நட்ச்சத்திர காரர்களுக்கு இந்த வருடத்தில் குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு குறைந்து அமைதியான சூழ் நிலை ஏற்படும். வருட முன் பகுதியில் செவ்வாய் மற்றும் சனி காரணத்தால் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
மிதுன ராசி
(மிருகசீர்ஷம்3,4 பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம் முடிய)
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருட முற்பகுதியில் அலுவலகம் மற்றும் உறைவினரிடையே சாதகமற்ற சூழ் நிலை இருந்தாலும் சனியின் சாரத்தால் சமாளித்து விடுவீர்கள். சற்று உணர்ச்சிகளை குறைப்பதன் மூலம் மற்றவரின் அபிமானத்தை பெறமுடியும்.
ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை அலுவலகத்தில் சற்று சாதமற்ற சூழ் நிலை ஏற்படாலாம். வீன் கருத்து பரிமாற்ற்ம் மற்றும் வாக்கு வாதம் இவற்றை தவிர்க்கவும். கொடுத்த வேலையை கவனமாக முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் அதிருப்தியை குறைக்கலாம். இந்த கால கட்டத்தில் அலுவலக பணியில் ச்ற்று கவனமாக செயல்படவேண்டியது அவசியம். அலுவலகத்தில் மற்றவறை பற்றி அதிகமாக பேசவேண்டாம். நம்பியவர்கள் கைவிடுவர்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு வேலை மாற்றம் வீடு மாற்றம் ஏற்படலாம். சாதமான தசா புக்தி நடப்பவர்களுக்கு அலுவலக இன்னல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. கணவர் மனைவியிடையே கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சனி ராகு கேது சாரத்தால் சற்று தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படலாம். உடல் நலனில் அதிக அக்கரை தேவை. விடு விற்க மற்றும் வாங்க நினைப்போர் சற்று பொறுமையை கடைபிடிக்கவும். எந்த முடிவு எடுத்தாலும் பெரியோரிடம் ஆலோசித்து எடுக்க வேண்டியது அவசியம். தேவையற்ற அலைச்சல் ஏற்படாலாம். கோபத்தை குறைக்கவும்.
மிருகசீர்ஷம் நட்சத்திரம்
மிருகசீர்ஷ நட்ச்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் குடும்பத்தில் குழப்பம் இருந்தாலும் வருட பின் பகுதியில் அனைத்து நிலைகளிலும் சாதமாக இருக்கும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டியது மிக
அவசியம் இதனால் வீன் சச்சரவை தவிர்க்க முடியும்.
திருவாதிரை நட்சத்திரம்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வருட நல்ல முன்னேற்றம் ஏற்படும். குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகளை வீட்டில் காட்டவேண்டாம்.
புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூசம் நட்ச்சத்திர காரர்களுக்கு இந்த வருட முன் பகுதியில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அலுவலகத்தில் சற்று குழப்பமான சூழ் நிலை உருவாகும். வீன் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
கடக ராசி
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம் மற்றும் ஆயிலியம் முடிய)
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருட முற்பகுதியில் அலுவலகத்தில் சாதகமான சூழ் நிலை தொடரும். குழந்தை வேண்டுவோருக்கு சாத்கமான சூழ் நிலை தொடரும். சனி ராகு கேத் சாரத்தால் குடும்பத்தில் சச்சரவு
வரும். பேச்சில் நிதானம் மிக அவசியம். சனி 5ம் இடத்தில் இருப்பதால் வீன் பயம் வரும். அஷ்டம கேது சற்று உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு குழ்ந்தை பாக்கியம் ஏற்படும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறு சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சி வசம் ஆவார்கள். சகோதர சகோதரிகள் இடையே கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படும். யாரையும் எளிதாக நம்பவேண்டாம். எந்த முடிவையும்
நன்றாக யோசித்து செய்யவும்.
புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூச நட்ச்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலக பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது குழப்பம் வரும். பேச்சில் நிதானம் அவசியம்.
பூசம் நட்சத்திரம்.
பூச நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வருட முற்பகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குரு பெயர்ச்சிக்கு பிறகு சகோதரர்களிடையே விரிசல் ஏற்படலாம். மனதில் வீண் பயம் மற்றும் பதட்டம் ஏற்படலாம்.
ஆயிலியம் நட்சத்திரம்
ஆயிலிய நட்சத்திர காரர்களுக்கு வருட முற்பகுதியில் சிற்சில பிரச்சனைகள் வந்தாலும் அலுவலக வேலைகள் சுமூகமாக செல்லும். ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு உணர்ச்சி வசப்படுவதை குறைப்பதன் மூலம் சச்சரவுகளை குறைத்து கொள்ளலாம். அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
சிம்ம ராசி
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய)
சிம்ம ராசி காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் நல்ல வசதிகள் சுபங்கள் ஏற்பட்டாலும் சற்று குடும்பத்தில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டு அவற்றை அனுபவிக்க முடியாமல் போகும். சிலருக்கு வீண் அவமானம் ஜன்ம குருவால்
ஏற்படும். குழந்தைகளால் அதிருப்தி நிலை ஏற்படும். உழைப்பிற்கு தக்க ஊதியமோ அல்லது பாராட்டுக்களோ கிடைக்காது.
ஆனால் ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு எல்லா விவகாரங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நான்காம் இடத்தில் சனி இருப்பதால் உடல் நிலையில் கவன்ம் அவசியம் வாகனங்களை கையாளும்போது அதிக கவனம் தேவை. நிதி நிலைமை சீரடையும். வீடு மனை வாங்கும் யோகம் அமையும்.
மகம் நட்சத்திரம்
மக நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் குழப்பமான நிலை ஏற்படும். உடல் நிலை மிக அவசியம். யாரை ந்ம்புவதது என்று தெரியாமல் குழம்புவீர்கள். எதிரிகள் பலம் அதிரித்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுட்டாலும் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. எதிரிகளை எளிதாக வெற்றிக்கொள்வீர்கள்.
பூர நட்சத்திரம்
பூர நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் என்ன செய்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களை திருப்தி படுத்தமுடியாது. குடும்பத்தில் அதிருப்தி நிலை ஏற்படும். சிலருக்கு குடும்பத்தாரின் ஒத்திழைப்பு கிடைக்காது.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு காரியங்களில் வெற்றி ஏற்படும். உடல் ந்லனில் சற்று அக்கரை தேவை.
உத்திரம் நட்சத்திரம்
உத்திர நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் எடுத்த காரியங்களில் தடை நிலவும்.. வெற்றி் சிறு தாமதமாக கிடைக்கும். வாகன ஓட்டிகள் மிக கவனமாக இருக்கவும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு தடைகள் விலகும். உழைப்பிற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
கன்னி ராசி
(உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்)
கன்னி ராசி காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் எதிர் பாராத செலவுகள் ஏற்படும். பண விவகாரங்களில் மிக எச்சரிக்கையாக இருக்கவும். அவசிய செலவுகளை தவிர வீண் செலவுகளை தவிர்க்கவும். ராகு குரு 12ம்
இடத்தில் இருப்பதால் சில திடீர் செலவுகள் வந்து சேரும். வருட ஆரம்பத்தில் சனி செவ்வாய் நிலைமையில் எடுத்த காரியங்களில் ஜயம் ஏற்படும். கடனை வாங்குவதை தவிர்க்கவும்.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு செலவுகள் குறைந்து நிதி நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்படுட்டாலும் ஜன்ம குருவினால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலருக்கு வீடு மற்றும் உடல் விஷயங்களில் சற்று கடினமான சூழ் நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகும். சற்று கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதி காக்கவேண்டும்.
உத்திரம் நட்சத்திரம்
உத்திர நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலைச்சல் அதிகரித்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். வேலை மற்றும் தொழிலில் இழுபறி நிலை ஏற்படும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு வேலை மற்றும் தொழிலில் நல்ல திருப்பம் ஏற்படும். மேலதிகாரிகள் மற்றும் பெரியோர்களை மதித்து நடப்பதால் வீண் பழியிலிருந்து தப்பிக்கலாம்.
ஹஸ்தம் நட்சத்திரம்
ஹஸ்த நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் நிதி நிலைமையில் சற்று தேக்க நிலை ஏற்படும். எதிர் பார்க்காத செலவுகள் ஏற்ப்ட்டு குடும்பத்தினரிடையே அதிருப்தி நிலை ஏற்படும்.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு நிதி நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஒத்திழைப்பு கிடைக்க கோபத்தை தவிர்க்கவும்.
சித்திரை நட்சத்திரம்
சித்திரை நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் தொழில் மற்றும் வேலை விவகாரங்களில் ஏமாற்றமான நிலை ஏற்படும். அதிதன்னம்பிக்கையால் தொழில் மற்றும் வேலை விவகாரங்களில் தேக்கமான நிலை ஏற்படும். அடுத்த்வரின் சொல்லுக்கு செவி சாய்த்தால் சற்று முன்னேற்றம் ஏற்படும்.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில் ஏற்பட்டாலும் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். வேலை
மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
துலா ராசி
(சித்திரை 1,2ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 2,3,4 பாதங்கள்)
துலா ராசி காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் குருவின் சாரத்தால் அனைத்து விவகாரங்களிலும் சீராக அமையும். இரண்டாமிடத்தில் இருக்கும் சனி மற்றும் செவ்வாய் கிரஙகளால் குடுமபத்தில் சண்டை மற்றும்
நிதானமற்ற உணர்ச்சி வச பேச்சால் அடுத்தவரின் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு செல்வுகள் அதிகமாகும். சிலருக்கு வெளி நாடு வாய்ப்பு வருட பிற்பகுதியில் கிடைக்கும். குடும்பத்தில் சிலருக்கு சுப செல்வுகள் அமையும் மற்றும் சிலருக்கு வீடு சம்பந்தமான அல்லது
மருத்துவ செல்வுகள் ஏற்படும். கடன் வாங்கி செலவு செய்வதை குறைத்து கொள்ளவும். தொழில் மற்றும் வேலை ரீதியாக அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு புது வீடு போகும் யோகம் அமையும்.. வருட பின் பகுதியில் ஜனவரி
மாதம் (2017) தைரிய ஸ்தானத்தில் சனி அமைவதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
சித்திரை நட்சத்திரம்
சித்திரை நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் சற்று சுமூகமாக செல்லும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு செல்வுகள், வீண் செல்வுகள் தவிர்க்கவும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும்.
சுவாதி நட்சத்திரம்
சுவாதி நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் சிற்சில வீண் செலவுகளை தவிர சுமூகமாக செல்லும். செலவினஙகள் அதிகரித்தாலும் அவை குடும்ப சுப செலவுகளாகவே மிகையாக இருக்கும். சிலருக்கு வீடு வாங்க விற்க சாதகமாக இருக்கும்,
விசாகம் நட்சத்திரம்
விசாகம் நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் சிற்சில மருத்துவ செலவுகள் இருக்கும். வருட பிற்பகுதியில் மருத்துவ செல்வினங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலை ரீதியாக அலைச்சல் அதிகரிக்கும்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
விருச்சிக ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசி காரர்களுக்கு சென்ற வருடத்தில் அலுவலகத்தில் அதிக வேலை பளு மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவின்மையால் கடினமான சூழ் நிலை இருந்திருக்கும். சிலருக்கு ஜன்ம சனியால் மருத்துவ பாதிப்புகள்
இருந்திருக்கும். இந்த வருட ஆரம்பித்தில் அலுவலகத்தில் படிபடியாக சுமூகமான நிலை ஏற்படும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்து விவகாரங்களிலும் சாதமாக நிலை அமையும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். ஜன்ம சனியால் சிற்சில சிறிய பாதிப்புகள் உடல்
நிலையிலோ அல்லது வேலை ரீதியாக ஏற்பட்டாலும் அவைகளால் அதிக பாதிப்பு இராது. சிலருக்கு வீடு விற்க வாங்க சாதமாக அமையும். சிலருக்கு தற்போது இருப்பதைவிட நல்ல வேலை மாற்றம் ஏற்படும். குழந்தை
பாக்கியத்திற்கு க்ரக நிலைகள் சாதமாக அமையும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருட பின் பகுதியில் ஜனவரி மாதம் (2017) சனி வக்கிர அடைவதால் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.
விசாகம் நட்சத்திரம்
விசாகம் நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலக பிரச்சனைகள் இருந்தாலும் அவை படிபடியாக மறையும். ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு நிதி நிலைமை நன்றாக இருக்கும். அனைத்து விவகாரங்களிலும் முன்னேற்றமாக இருக்கும்.
அனுஷம் நட்சத்திரம்
அனுஷம் நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலக சூழல் சிற்சில தடங்கள் இருந்தாலும், படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு
கிடைக்கும். புது முயற்சிகள் கைகூடும்.
கேட்டை நட்சத்திரம்
கேட்டை நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் குடும்ப ரீதியாகவோ அல்லது உடல் நிலை ரீதியாகவோ சிற்சில பிரச்சனைகள் இருந்தாலும் ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் சாதகமாக இருக்கும், முயற்சிகள் கை கூடும்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
தனுசு ராசி
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசி காரர்களுக்கு சென்ற வருடத்தில் அலுவலகத்தில் அனைத்திலும் மிக் சாதமாக இருந்திருக்கும். குடும்பத்தில் அமைதி, வேலை மற்றும் தொழில் லாபகர்மாக இருந்திருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல முன்னேற்றம் இருந்திருக்கும். இந்த வருட ஆரம்பத்தில் முன்னேற்றமான நிலை தொடரும். சுப விரயங்கள், வீடு மற்றும் குடும்ப அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனி செவ்வாய் சாரத்தின் காரணமாக சிலருக்கு பிரயாண செலவுகள் ஏற்படும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் மற்றும் வேலை விவகாரங்களில் கடினமான நிலை அமையும். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் யாரை பற்றியும் யாரிடமும் விவாதிக்க
வேண்டாம். சிலருக்கு வேலையில் விருப்பமற்ற ஊர் மற்றும் பதவி மாற்றம் அமையும். வருட பின் பகுதியில் ஜனவரி மாதம் (2017) சனி வக்கிர அடைவதால் வீண் விரயங்களும் அலைச்சலும் ஏற்படலாம்.
மூலம் நட்சத்திரம்
மூலம் நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் நல்ல சுமூகமான நிலை இருந்தாலும் சிற்சில செலவுகள் ஏற்படும்.. ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகம் மற்றும் தொழிலில் தேக்கமான நிலை ஏற்படும். புது
முயற்ச்சிகளை தீர ஆராய்ந்து செய்வதால் ஏமாற்றத்தை தவிர்க்கமுடியும்.
பூராடம், நட்சத்திரம்
பூராடம்,நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலக சூழல் சுமூகமாக செல்லும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகத்தில் சிற்சில இன்னல்கள் ஏற்படும். அலுவலகத்தில் யாரையும் விரோதித்து
கொள்ளவேண்டாம். கொடுத்த வேலையை எதிர்ப்பு காட்டாமல் ஏற்று கொள்ளவேண்டியது அவசியமாகும்.
உத்திராட நட்சத்திரம்
உத்திராட நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அனைத்து விஷயங்களிலும் சுமூகமான சூழ் நிலை நிலவும். குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகத்தில் சிறிது கடினமான சூழ் நிலை ஏற்படும். சிலருக்கு
விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு தீர்த்த யாத்திரை செல்ல சாதமான நேரமிது.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
மகர ராசி
(உத்திராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள் முடிய)
மகர ராசி காரர்களுக்கு சென்ற வருடத்தில் உடல் நிலை மற்றும் மருத்துவ தன விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதியின்மை, பிள்ளைகள் வழியில் அதிருப்தி, வீண் அலைச்சல், சகோதர்களிடையே மனஸ்தாபம்
முதலியவை ஏற்பட்டிருக்கும்.. இந்த வருட ஆரம்பத்தில் உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.உள்ளது. சனி செவ்வாய் சாரத்தின் காரணமாக தொழில் லாபகாரமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் மற்றும் வேலை விவகாரங்களில் சுமூகமான சூழ் நிலை உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு லாபகரமான ஊர் மற்றும் பதவி மாற்றம் அமையும். ராகு கேது சாரங்களால் குடும்பத்திலும் உடல் நிலையிலும் கவனம் அவசியம். பேச்சில் நிதானம் அவசியம். விட்டுக்கொடுத்து போவதால் வீட்டில் குழப்பத்தை குறைக்கமுடியும்.
உத்திராட நட்சத்திரம்
உத்திராட நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் உடல் நிலையில் சற்று பிரச்சனைகள் இருக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் மற்றும் பொருள் தொலைந்து போதல் முதலியவை ஏற்பட்டிருக்கும். ஆகஸ்ட் குரு
பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புது முயற்ச்சிகளை நல்ல பலன் தரும். சிலருக்கு பழைய கடன் வசூலாகும்.
திருவோண நட்சத்திரம்
பூராடம்,நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் உடல் நிலையில் பாதிப்பு இருந்தாலும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும். வீண் விரயங்கள் படிப்படியாக குறையும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு
அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும்.
அவிட்ட நட்சத்திரம்
அவிட்ட நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் குடும்ப பிரச்சனை மற்றும் மன நிம்மதியின்மை ஏற்பட்டிருக்கும். உடல் நிலை அஜாக்கிரதையால் சற்று பாதிப்பு ஏற்படும். ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு உடல்
நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப பிரச்சனைகள் குறையும். முதலீடுகள் செய்யலாம்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
கும்ப ராசி
(அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள் முடிய)
கும்ப ராசி காரர்களுக்கு சென்ற வருடத்தில் உடல் நிலையில் சிற்சிறு பிரச்சனைகள் இருந்தாலும் மற்றபடி சுமூகமான நிலை நிலவி இருக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம், உயர் அதிகாரிகளின் ஆதரவு முதலியவை இருந்திருக்கும். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் அமைந்திருக்கும். இந்த வருட முன் பகுதியில் சுமூகமான நிலை தொடரும். தொழில் மற்றும் வேலை நிமித்தமான பயணங்கள் சாதமாக இருந்திருக்கும். சனி செவ்வாய் சாரத்தினால் தொழில் மற்றும் அலுவலகத்தில் முன்னேற்றம் காணும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் எழலாம். சிலருக்கு திடீர் தன விரயம் மருத்துவத்திற்காகவோ அல்லது குடும்ப சகோதர சகோதரிக்களுக்காகவோ அல்லது உறவினர் வகையிலோ ஏற்படும். வாக்கில் கவனம் தேவை. சிலருக்கு நிதானமற்ற பேச்சால் நஷ்டம் அல்லது குடும்பத்தினர் வெறுப்பு ஏற்படலாம்.
அவிட்ட நட்சத்திரம்
அவிட்ட நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் உடல் நிலையில் சற்று பிரச்சனைகள் இருந்தாலும் அலுவலக பணிகள் சுமூகமாக செல்லும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளி நாடு செல்ல
வாய்ப்புகள் வரும். ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகம் மற்றும் தொழிலில் சற்று நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.
சதய நட்சத்திரம்
சதய நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலகத்தில் சுமூகமான நிலை நிலவும் அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகம் மற்றும் தொழிலில் சற்று நஷ்டம் ஏற்படலாம். பண விஷயத்தில் மிக கவனமாக இருக்கும். வாக்கு கட்டுபாடு அவசியம்.
பூரட்டாதி நட்சத்திரம்
பூரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலகத்தில் சுமூகமான நிலை இருந்திருக்கும். உடல் நிலையில் கவனம் தேவை. ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு உடல் நிலையில் மற்றும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். பண விஷயத்தில் மிக கவனம் தேவை. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.
துர்முகி வருட ராசி பலன்கள்
பொது பலன்கள்
மீன ராசி
( 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மீன ராசி காரர்களுக்கு சென்ற வருடத்தில் தன்னுடைய உடல் நிலையில காரணமாகவோ அல்லது குடும்பத்தினர் உடல் நிலை காரணமாகவோ செலவுகள் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு திடீர் பண நெருக்கடி நேர்ந்திருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும். அலுவலகத்தில் சிற்சில பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கும். அவசர கடன் வாங்க நேர்ந்திருக்கும். சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு இருந்திருக்கும்.இந்த வருட ஆரம்பத்தில் நிதி நிலை மற்றும் குடும்ப நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். ஆனாலும் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை சீரடையும். சிலருக்கு வேலை அல்லது தொழில் நிமித்தமாக வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம்
வேண்டுவோருக்கும் சாதகமான நேரமிது. வீடு விற்க வாங்க சாதமான சூழ் நிலை அமையும். முதலீடுகள் லாபம் கொடுக்க ஆரம்பிக்கும். திருமண வரன் தேடுவோர் சிலருக்கு திருமண யோகம் அமையும்.
பூரட்டாதி நட்சத்திரம்
பூரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் உடல் நிலையிலும் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.. ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளி நாடு செல்ல வாய்ப்புகள் வரும் அலுவலகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.
உத்திரட்டாதி நட்சத்திரம்
உத்திரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் நிதி நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணும். அலுவலகத்தில் நிலமை சீரடையும்.
ஆகஸ்ட் குரு பெயர்ச்சிக்கு பிறகு அலுவலகம் மற்றும் தொழிலில் சற்று
முன்னேற்றம் ஏற்படலாம். பண விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
ரேவதி நட்சத்திரம்
ரேவதி நட்சத்திர காரர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் அலுவலகத்தில் படிப்படியாக சுமூகமான சூழ் நிலை நிலவும். கடன் வாங்குவதை தவிர்க்கவேண்டியது அவசியம். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
ஆகஸ்ட் மாத குரு பெயர்ச்சிக்கு உடல் நிலையில் மற்றும் குடும்பத்தில் சுமூகமான நிலை நிலவும். நிதி நிலமை சீரடையும். வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளி நாடு செல்ல சாதமாக நேரமிது.
0 comments:
Post a Comment